Piragu: India-vil irundhu perazhivu aapaththu meetpu patriya varaikalai kadhaigal
Vineetha Nalla, Nihal Ranjit, Yashodara Udupa, Mythili Madhavan, Jasmitha Arvind, Garima Jain, Teja Malladi | 2022
Abstract
பிறகு என்பது பேரிடரின் தாக்கங்கள் மற்றும் அதை தொடர்ந்து வரும் மீட்பு செயல் ஆகியவற்றின் வரைபட வர்ணனை கொண்ட ஒரு தொகுப்பாகும். இந்த கதைகள் ஒடிஸா, தமிழ்நாடு, மற்றும் கேரளா ஆகிய இந்திய மாநிலங்களிலிருந்து 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கிடையே ஆவணமாக்கப்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட தனிநபர், குடும்பங்கள், மற்றும் மக்கள் வகுப்பினரின் சாட்சியங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். வீடுகள் மறுக்குடியமர்வு, வாழ்வாதார இழப்பு, மற்றவர்களிலிருந்து பாலின அடிப்படையிலான விதிவிலக்குகள் ஆகியவை சார்ந்த சவால்கள் குறித்து அவர்கள் நம்முடன் பகிர்ந்துக்கொண்டார்கள். இத்தொகுப்பின் மையத்தில் தான் பாதிக்கப்பட்டோரை ஊடகமும், மாநில நடிகர்களும், அதிகாரபூர்வ ஆவணங்களும் எப்படி சித்தரித்தன எனும் ‘உருவகிப்பின்’ சிந்தனையும், அவர்களது தேவைகள் எப்படி உருவகிக்கப்பட்டன மற்றும் அபாய விளிம்பில் இருப்போரின் வாழ்க்கை மீது இந்த சித்தரிப்புகள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனும் சிந்தனையும் காணப்படுகிறது.
வரைபட மார்க்கமாக இந்த கருப்பொருட்களை நகைக்சுவை கதைப்புத்தகமாக விளக்குவது என்பது பேரிடர் அபாயங்கள் மற்றும் மீட்டமைக்கப்படும் தனிநபர் அனுபவங்களை எடுத்துரைக்கும் ஒரு அடித்தளத்தை வழங்குகிறது. உருவகிப்பின் இந்த ஆக்கப்பூர்வ பாங்கு என்பது அத்தகு முக்கியமான வர்ணனைகளை கல்விசார் நிலைகளை தாண்டி அதிகளவிலான வாசகர்களை சென்றடைய உத்தேசம் கொண்டுள்ளது.
ISBN: 9788195648580
DOI: https://doi.org/10.24943/9788195648580